நல வாரிய ஆணையரிடம் கோரிக்கை..
செங்கல்பட்டு மாவட்டம்…
அமைப்புசாரா தொழிலாளர் சார்பில் தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் கட்டுமான உடல் உழைப்பு அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேல்முருகன் அவர்கள் செங்கல்பட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மாவட்ட உதவி ஆணையர் திரு செண்பகராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம் மாவட்டஉதவி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தலின்படி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சிறப்பாக கிடைக்கவும் இனிவரும் காலங்களில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் இயங்கப்படும் என்றும் செங்கல்பட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் காஞ்சிபுரம் செல்ல வேண்டாம் என்றும் செங்கல்பட்டிலேயே அவரது தேவைகளை பூர்த்தி செய்யும்படி செங்கல்பட்டு மாவட்டத்திலேயே சிறப்பாக செயல்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் மாவட்ட உதவியாளர் திரு செண்பகராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்