இயேசு அவதரித்த நாள்..
இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது
இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாளே கிறிஸ்துமஸ்.
சாதி, மத, வேற்றுமைகளை தாண்டி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.
இயேசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது.
இக்குழந்தையைக் கருவில் சுமக்கிற போது ஒரு சாதாரண பாமரத்தாய் புரட்சிப்பாடல் பாடினார். எனவே தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை என்று அழைக்கப்படுகிறது
கிறிஸ்து பிறப்பின் நோக்கம் உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் முழுமை பெறட்டும்..
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்!!!
செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்