ராமானுஜரின் ஜனன தினம்

கணித மேதை
ஸ்ரீனிவாச ராமானுஜரின் ஜனன தினம் இன்று…!

ஸ்ரீனிவாச ராமானுஜர் தெற்றம்:
டிசம்பர் 22, 1887.மறைவு:
ஏப்ரல் 26, 1920…அகவை 32.இவர்
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும்,
செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ராமானுஜரின் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
பிறப்பு:டிசம்பர் 22, 1887
ஈரோடு, சென்னை.இறப்பு:
26 ஏப்ரல் 1920 அகவை 32.
கும்பகோணம்.

மாகாணம்.கல்வி பயின்ற  நிறுவனங்கள்:
அரசினர் கலைக் கல்லூரி 
பச்சையப்பன் கல்லூரி 
திரித்துவக் கல்லூரி,
கேம்ப்ரிச் (இளங்கலை, 1916)

ஆய்வேடுபகு எண்கள் (1916)Academic advisors
சி. எச். ஆர்டி
சே. ஈ. இலிட்லுட்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் 
சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் ராமானுஜர். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.ராமானுஜரின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர்.
 ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.