இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்..
இகக(மாலெ) விடுதலை கட்சி மாநில செயலாளராக பழ. ஆசைத்தம்பி புதிதாக தேர்வு !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை [ சிபிஐ-எம்எல் ( லிபரேசன்)] அமைப்பின் மாநில செயலாளர் என்.கே.நடராஜன் அவர்கள் கடந்த வாரம் திடீரென இறந்ததைத் தொடர்ந்து, மாநில கமிட்டியின் அவசர கூட்டம் இன்று கோவையில்,
தோழர். பாலசுந்தரம் தலைமையில்
நடைபெற்றது. கட்சியின் பொது செயலாளர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சங்கர் பங்கெடுத்துக் கொண்டனர். அனைத்து மாநில கமிட்டியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மறைந்த தோழர். என்.கே. நடராஜன் அவர்களுக்கு கூட்டம் அஞ்சலி செலுத்தியது. பல்வேறு மாநில கமிட்டி உறுப்பினர்களும் அவரை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
மாநில கமிட்டி கூட்டத்தில், தமிழ்நாடு கட்சியின் புதிய மாநில செயலாளராக தோழர். பழ.ஆசைத்தம்பி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில செயலாளர் பற்றிய விவரக் குறிப்பு:-
பழ. ஆசைத்தம்பி (வயது 51) அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் பிறந்தவராவர். கல்லூரி மாணவராக இருந்த காலம் தொட்டு முற்போக்கு அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியான இகக(மாலெ) விடுதலை அமைப்பில், 25 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேரமாக பணியாற்றி வருகிறார். இளைஞர் கழகத்தில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும், பிறகு மாநில செயலாளராகவும் பணியாற்றினார். பிறகு, பதினாறு ஆண்டுகளாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கானப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார். திருமணமானவர்.
மாநில கமிட்டி,
இகக ( மாலெ) விடுதலை
CPIML Liberation.