அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவுதல் வாகன பணி…
டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து பெருமையுடன் வழங்கும் Dr.APJ Abdul Kalam Satellite Launch vehicle mission-2023 திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று(19/12/2022) காலை 11.30 மணியளவில் புதுச்சேரியில் உள்ள காமராஜர் மணிமண்டப அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிககு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு எம்பலம் ஆர். செல்வம்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை,
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் B. வெங்கட்ராமன்,
தமிழ்நாடு மாநில மேம்பாட்டு திட்டக்குழுவின் உறுப்பினர் மண்வள மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலாளர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்பேஸ்சோன் இந்தியா உரிமையாளர் டாக்டர். ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் இத்திட்டத்தின் 3000 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசப்பயிற்சிக்கு ஆகும் மொத்த செலவும் ஏற்றுக்கொண்டனர் என சிறப்புரையாற்றினார். மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் சிறப்புரையாற்றினார். டாக்டர் ஆ ப ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர். APJM. நசீமா மரைக்காயர் வரவேற்புரையாற்றினார்.
டாக்டர் ஆ ப ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் தொழில்நுட்ப ஆலோசகரும் மைக்ரோசாப்ட் நிறுவன மண்டல இயக்குனருமான திரு. T. N. C. வேங்கடரங்கன் நன்றியுரையாற்றினார்..
செய்தி தனஞ்செய் புதுச்சேரி