திருப்பூர் வடக்கு திருமுருகன்பூண்டி: பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு 14-12-22. திருமுரும்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடம் ஆகியும். நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான அலுவலர்களை உடனே நியம்த்திட வேண்டியும். புதிய வரி விதிப்பு ,பெயர் மாற்றம் ,புதிய குடிநீர் இணைப்பு, வரைபட அனுமதி போன்ற பணிகளுக்கு மக்களை அலைக்கழிப்பதை கண்டித்தும். பொது சுகாதாரம் குடிநீர் விநியோகம் தெரு விளக்கு வரி வசூல் போன்ற பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணை 115-152ஐ உடனடியாக வாபஸ் பெற வேண்டியும். லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை வழிநடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்
