லட்சுமியின் 69வது பிறந்த தினம்

தமிழ் சினிமாவின் பண்பட்ட நடிகை
லட்சுமியின் 69வது பிறந்த தினம் இன்று…!

லட்சுமி …இவர் தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபால் “ஜீவனாம்சம்”என்ற  படத்தின் மூலம் லட்சுமியை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.இப்படம்  1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். 
லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.இவரின் இயற்
 பெயர் வெங்கடமகாலட்சுமி.
பிறப்பு:டிசம்பர் 13, 1952 …அகவை 69.
முதல் கணவர் பாஸ்கர், நடிகர் மோஹன் சர்மா
இரண்டாவது கணவர்,நடிகர் சிவச்சந்திரன் மூன்றாவது கணவர்.

பிள்ளைகள்:ஐஸ்வர்யா.
பெற்றோர்:ஒய். வி. ராவ் ,ருக்மணி
1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974)
லட்சுமிக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என ஹிந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. ஹிந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும்,வங்காள திரையிதழாளர்கள் விருதும்.கிடைத்தது.
1977-ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,மக்கள் திலகம் எம்ஜியார்,ஜெய்ஷங்கர்,சிவக்குமார்,
முத்துராமன்,கமலஹாசன்,ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர் லட்சுமி.நூற்றுக்கு நூறு,ராஜ ராஜ சோழன், தியாகம்,சங்கே முழங்கு,
ஆனந்தக்கண்ணீர்,அவன் அவள் அது,
ராஜரிஷி,ஸ்ரீ ராகவேந்திரா,சிறை,
கண்மணி ராஜா,புகுந்த வீடு அந்தஸ்து,
திருமாங்கல்யம்,உதயகீதம்,என் உயிர் கண்ணம்மா,ஒரு மலரின் பயணம்,நெற்றிக்கண்,பொல்லாதவன்,ரத்த தானம்,மாநகரக் காவல் போன்ற படங்களில் பண்பட்ட நடிப்பைக் காணலாம்.பல  ஊடகங்கள் சிறை படத்தில் லட்சுமியின் நடிப்பைப் பாராட்டியது.உதயகீதம் படத்தில்
இவர் ஏற்ற காவல்துறை வேடம் மீண்டும் ஓர் தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரியை ஞாபகப்படுத்தியது.எந்த வேடமானாலும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிப்பில் அசத்துபவர் லட்சுமி.மாநகரக் காவல் படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைப் போல ஒப்பனையாற்றி நெகிழ்வாக நடித்தார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் லட்சுமிக்கு ஓர் தனியிடமுண்டு.

சின்னத்திரையிலும் அச்சமில்லை,அச்சமில்லை என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது.கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வந்தார்.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பல சமூக விழிப்புணர்வகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்தார்.

தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படமான சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கும்போது உடன் நடித்த  நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரனு டன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.