2-ம் ஆண்டு நினைவஞ்சலி..
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் ஐயா டாக்டர் கே.காளிதாஸ் அவர்களுடைய இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 11.12. 2022 இன்று காலை 8-மணியளவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கத்தோலிக் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது,
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவரான சிரஞ்சீவி அனீஸ் நிறுவனத் தலைவர் டாக்டர் கே காளிதாஸ் அவர்கள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் வி.சுப்பையா. திண்டுக்கல் மாவட்ட ஆசை மீடியா நெட்வொர்க் செய்தியாளர் ராஜவேல், எழுத்தாளர் மலரவன். மருதமுத்து, சேட் சங்கர், மற்றும் டி.ஜே.யூ. மாவட்டங்கள் சார்பாக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது,
கத்தோலிக் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது,
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் அவர்களுக்கு நலவாரிய அமைத்திட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி பல போராட்டங்களும் உண்ணாவிரதமும் மேற்கொண்டவர்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சேர்ந்தவர்களுக்கும்
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர்
மூத்த பத்திரிகையாளர் டாக்டர் கே காளிதாஸ் அவர்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செய்தி ரபி திருச்சி.