தமிழ்பெண் ஈழத்தமிழருக்காக குரல்…
ஐக்கிய நாட்டு சபையில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த டாக்டர். சுகந்தி ரவீந்திரநாத்.ஜெர்மனி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான மன்றத்தின் பதினைந்தாவது அமர்வு டிசம்பர் மாதம் 1 முதல் டிசம்பர் 2 வரை, சுவிச ர்லாந்து ஜெனிவாவில் நடைபெற்றது.
இதில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர். சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் இளம் தமிழ் மாணவர்கள் ( Jeunesse Étudiante Tamoule ) எனும் ஐ.நா வின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார்.
அதில் ஈழத்தமிழர்கள் பிரச்சனைகளையும் சிறுபான்மை இனத்தவர் படும் துயரங்களையும் தமிழ் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வினையும் வழங்குமாறும் தனது வாய்மூல அறிக்கை ஊடாக ஐ. நா மனித உரிமைகள் சபையில் பதிவிட்டுள்ளார்.
இவர் Master of socialwelfare administration ( MSW )சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளதுடன் ஆர் எஸ் எனும் அறக்கட்டளை ஊடாக பல சமூக சேவைகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் சமூக சேவை மேல் அவருக்கு இருக்கும் ஆதீத ஆர்வத்தால் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து பன்னாடு தளங்களில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் ஊடாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் உலகத் தமிழர் இயக்கம் என்ற அமைப்பின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர். சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் தமிழர்களுக்காக தான் இந்த உன்னதமான பணியில் தொடர்ந்து
செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.
இவர் தமிழர்களுக்கு செய்யும் சேவை பாராட்டுக்குரியது, இவரது மக்கள் சேவை சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
செய்தி தமிழ்மலர் குழு.