மாணிக்க விநாயகத்தின் ஜனன தினம்
தமிழ் சினிமா பாடகரும்,நடிகருமான அமரர்
மாணிக்க விநாயகத்தின் ஜனன தினம் இன்று…!
மாணிக்க விநாயகம்.. தோற்றம்
10 டிசம்பர் 1943 .மறைவு;26 டிசம்பர் 2021.
இவர் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும்
நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மாணிக்க விநாயகம் . இயற்பெயர் வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்பிடம்:மயிலாடுதுறை, தமிழ்நாடு.
இறப்பு:26 திசம்பர் 2021..அகவை 78
சென்னை. பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே என்ற பாடல் இவர் பாடிய பாடல்களில் ஜனரஞ்சகமாக அமைந்தது.
பாடகராக:
• தில் (2001)
• தவசி (2001)
• கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
• ரன் (2002)
• ரோஜாக்கூட்டம் (2002)
• ஜெயம் (2002)
• இயற்கை (2003)
• தூள் (2003)
• ஒற்றன் (2003)
• பார்த்திபன் கனவு (2003)
• நியூ (2004)
• திருப்பாச்சி (2004)
• சந்திரமுகி(2005)
• கனா கண்டேன் (2005)
• தம்பி (2006)
• வெயில் (2006)
• பருத்திவீரன் (2007)
• மஜா (2007)
• ஓரம் போ (2007)
• சேவல் (2008)
• மகிழ்ச்சி (2010)
• சிங்கம் (2010)
• தொப்புள் கொடி (2010)
• விருகம்பாக்கம் (2012)
நடிகராக:
• தொங்கா தொங்கடி
• திருடா திருடி
• யுத்தம் செய்
• பேரழகன்
• கள்வனின் காதலி
• போஸ்
• திமிரு
• கிரி
• பலே பாண்டியா
• வ குவாட்டர் கட்டிங்
• வேட்டைக்காரன்
இவர் உடல் நலக்குறைவு காரணமாக, 2021 டிசம்பர் 26 அன்று காலமானார்..
ஆக்கம் :எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .