கரையை கடந்த மாண்டஸ் புயல்
சென்னையில் மட்டும் 48 மரங்கள் வேரோடு சாய்ந்தது என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.*வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ஆம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த மாண்டஸ், மீண்டும் வலுவிழந்து புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மாமல்லபுரத்தில் 9ஆம் தேதி இரவு முதல் 10ஆம் தேதி காலை வரை கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டது.நேற்று இரவு 8.30 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலிருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது மாண்டஸ் புயல். நேற்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை சுமார் 3 மணிக்கு கரையை கடந்தது.ஈசிஆர் சாலையில் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தில் சின்னாபின்னமாகின.மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வந்தபோது, வீசிய பலத்த காற்றால், பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஓஎம்ஆர் சாலையிலிருந்து ஈசிஆர் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. செய்தி மாரிமுத்து