ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் ராயகடா பாசஞ்சரில் இருந்து கீழே இறங்கிய மாணவி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாணவி சசிகலாவை ரயில்வே ஊழியர்கள் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முதல் ஐசியுவில் அவசர சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 8 வியாழன் அன்று உயிர் பிரிந்தது.
