சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழுடன் ஊக்கத்தொகை
புதுக்கோட்டை மாவட்டம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பாக 2022 -23ஆம் ஆண்டிற்கான இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில அளவில் விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதலாம் பரிசு ரூ1,00,000/ம் இரண்டாம் பரிசு ரூ 60,000/ம் மூன்றாம் பரிசுரூ 40,000/ம் வழங்கப்பட இருக்கிறது. இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிரிடப்படும் தோட்டக்கலை பயிர்களுக்கு அங்கக இடுபொருள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கான அங்கக சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை விவசாயிகள் உழவன் செயலி(Uzhavan App) மூலம் பதிவேற்றம் செய்து, சிறந்த விவசாயிகளுக்கான விருது பெற விண்ணப்பிக்க ரூ100 /- கட்டணமாக அந்தந்த வட்டாரங்களில் செலுத்த வேண்டும். மேலும் உழவன் செயலியில் 21 .11 .2022 முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு இ.ஆ.ப . அவர்கள் தெரிவித்துள்ளார்.. தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கியிலிருந்து கரு.வேலாயுதம்