பகவத் கீதை மக்களை தன்னலமற்ற பணி செய்ய தூண்டுகிறது: முதல்வர் யோகி ஆதித்யநாத்
புனித நூலான பகவத் கீதை தன்னலமற்ற பணிகளைச் செய்ய மக்களைத் தூண்டுகிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.”அர்ஜுனனின் உள்ளார்ந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், முழு மனிதகுலத்தையும் நீதியின் பாதையில் செல்ல தூண்டுவதற்காக பகவான் கிருஷ்ணர் கீதையைப் படைத்தார்” என்று ஆதித்யநாத் கூறினார். இங்கு நடைபெற்ற கீதா ஜெயந்தி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், கீதா பிரஸ் நிறுவனர் சேத் ஜி ஜெய்தயாள் கோயங்கா மற்றும் பாய் ஹனுமான் பிரசாத் போடார் ஆகியோரைப் பாராட்டினார்.