கூட்டுறவு கட்டட சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம்..
ஆர்.860 மணப்பாறை கூட்டுறவு கட்டட சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம்
ஆர்.860 மணப்பாறை கூட்டுறவு கட்டட சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் வியாழக்கிழமை சங்க அலுவலகத்தில் மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், சங்கத்தின் தலைவருமான மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு துணைத்தலைவரும், அதிமுக நகர்மன்ற உறுப்பினருமான பொ.கௌசிக் அவர்கள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் தீர்மானங்களை சங்க அலுவலர் மதியழகன் படித்தார்.
சங்கத்தின் வரவு செலவினம் குறித்தும், எதிர்கால வளர்ச்சி குறித்தும் இயக்குநர்கள் விவாதித்தனர். முடிவில் சங்கத் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து கூறி நிறைவு செய்தார்.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் இயக்குநர்கள் என்.தங்கம், எஸ்.எம்.ஷாஜஹான், லெட்சுமி, சாந்தாமேரி, பாபியோலா ஜான், சௌக்கத் அலி, திவ்யா, பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்