குஜராத் தேர்தல்: சைக்கிளில் காஸ் சிலிண்டருடன் வாக்குச்சாவடிக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளையுடன் சைக்கிளில் சமையல் எரிவாயு உருளையுடன் வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி புறப்பட்டுச் சென்றார். அதிக பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதத்திற்கு பாஜகவை குற்றம்சாட்டிய தனானி, குஜராத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸின் மீள்வருகை ஏற்படும் என்றார்.