கலைத் திருவிழா

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் தனித் திறனை வளர்க்கும் விதத்தில் கலைத் திருவிழா என தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளியில் சிறப்பாக பங்கேற்கும் மாணவ மாணவிகளை வட்டார அளவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவரை மாவட்ட அளவிலும் அதன் பின் மாநில அளவிலும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மாநில அளவில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு வெளிநாடு சுற்றுலா செல்வதற்கும் பரிசுகளும் வழங்கப்பட்டு
ஊக்குவிக்கபடுகிறார்கள்.
30.11.2022 இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்விமாவட்டம் அரிமளம் வட்டார அளவில் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடன நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றியத்தில் உள்ள பதிமூன்று நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் ஏழு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இரும்பாநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் இரும்பாநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று நடன நிகழ்ச்சியில் பங்கு பெறவைத்தார்கள்..
தமிழ் மலர்செய்திக்காக அறந்தாங்கியிலிருந்து கரு. வேலாயுதம்

Leave a Reply

Your email address will not be published.