அரசு சொகுசு பேருந்து விபத்து..

திருச்சி-மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு சொகுசு பேருந்து செவ்வாய்கிழமை அதிகாலை கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்,
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு சொகுசு பேருந்தில் சுமார் 33 பயணிகள் பயணித்தனர், மணப்பாறையை கடந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நடுப்பட்டி என்னும் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை சென்ற பேருந்து மேம்பாலத்தை கடந்து கீழே இறங்கும்போது வளைவு இருப்பது தெரியாமல் நேராகச் சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு பகுதியில் மோதியது. இதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பேருந்து ஒட்டுநர் தியாகராஜன் (37) உதவியாளர் கந்தசாமி (55) உடுமலைபேட்டை காவல் உதவி ஆய்வாளர் முருகன் (58) சென்னை பெரம்பூர் சையது அப்ரித் (19) உள்ளிட்ட பயணிகள் 10 பேர் காயமடைந்தனர், தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீசார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.