தமிழ்நாட்டில் டிபார்ட்மெண்ட் ஆப் பப்ளிக் ஹெல்த் (DPH) என்று அழைக்கக்கூடிய மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ..இதனை முன்னிட்டு நூற்றாண்டு கொண்டாடத்தில் தனது முயற்சியில் புதுக்கோட்டை சுகாதாரத் துறையைச் சேர்ந்த அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஏம்பல் ராஜா அவர்களின் டிஜிட்டல் ஆல்பம் பாடல் “ஆயிரம் நோய்கள் எதிர்த்தோம் …
கோடி முகங்களுக்கு புன்னகை அள்ளிக் கொடுத்தோம் ….
மக்கள் நலமே மகத்துவம்… மக்களை தேடி மருத்துவம் ….மருத்துவத்தில் சமத்துவம் மானுடத்தின் தனித்துவம்” …I LOVE DPH என்ற பாடலை இசை அமைத்து எழுதி தனது குரலால் .. சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை தனது வரிகளில் அழகாக பதிவு செய்து கலைவடிவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கியுள்ளார்..மருத்துவர் ஏம்பல்ராஜா…
தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கிலிருந்து கரு.வேலாயுதம்

