குழந்தைகள் யோகா உலக சாதனை நிகழ்ச்சி

அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சாய் யோகா மையம் இணைந்து நடத்திய குழந்தைகள் யோகா உலக சாதனை நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடேசன் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது

இந்த நிகழ்வு கண் தானம் விழிப்புணர்வு செய்ய வலியுறுத்தி
யோகா உலக நிகழ்ச்சி

சாதனை பதிவாக செய்யப்பட்டது

அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் லயன் பி வெங்கடேசன்,M.A., அவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வரவேற்புரை வழங்கினார்கள்

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினரின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சிறப்பு அழைப்பாளர்களாக சமூக சேவையை திருமதி லட்சுமி ஜெயக்குமார், அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்

லயன் எஸ் சோமசேகரன் மாவட்ட முதன்மை நீதிபதி ஓய்வு

கலைமாமணி
திரு டாக்டர் வி டி சாமிநாதன்
கலை மாமணி யோகா டாக்டர்
H பாலச்சந்தர்

திருமதி அனுசுயா டெய்சி எர்னஸ்ட் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு கூடுதல் கண்காணிப்பாளர் இவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார் கள்

கலை மாமணி சிறுபி. ராஜகோபால் சாய் யோகா மையம் இந்த நிகழ்வை தொகுத்து நன்றி உரை வழங்கினார்கள்

பெருவாரியான குழந்தைகள் ஊர் பெரியவர்கள்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்

மாநில மாவட்ட ஒன்றிய ,பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்

செய்தி
லயன் வெங்கடேசன்
மாநிலச் செயலாளர் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்

Leave a Reply

Your email address will not be published.