சிறப்பு பேருந்துகள்…
தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் 850 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கம்..!!
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 800 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை வார விடுமுறையையொட்டி சுதந்திர தினம் வருவதால் சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். 3 நாட்கள் விடுமுறையையொட்டி மக்களின் வசதிக்காக ஏற்கனவே 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துறை சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 850 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டிருக்கின்றன. விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு திரும்ப 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் செய்தி வேல்முருகன். தமிழ்மலர் மின்னிதழ்