இஸ்லாத்தின் விடிவெள்ளி..
இஸ்லாத்தின் விடிவெள்ளி கண்ணியத்திற்குரிய நபிகள் நாயகம் அவர்கள் இறைவனுடன் சங்கமித்து இன்றுடன் 1390 ஆண்டுகள் நிறைவடைகின்றது….!
முகம்மத் நபி அல்லது
முகம்மத்
கிபி 570 பிறந்தார். 8 ஜூன் கிபி 632 இல் 62வயதில் மறைந்தார். இவரின் அரீபியப் பெயர்: அபூ ஹல்-காசிம் முகம்மத் இப்ஃனு அஃப்துல்லா இஃப்னு அஃப்துல்-முத்தலிஃப் இஃப்னு நபியவர்கள் மக்கா நகரைச் சேர்ந்தவர்கள். அரேபியத் தீபகற்பம் முழுமையையும்
இஸ்லாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர்
முஸ்லிம்களால் மட்டுமல்லாமல்பாபிஸ்துகள் மற்றும் பஹாய்
சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முஸ்லிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என கூறுகின்றனர்.முகம்மத் நபியவர்கள்இஸ்லாத்தின்
தீர்க்கதரிசியாவார்.முகம்மத் நபி ஒரு கணிப்பின் படி கிபி 570இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை
அபூ தாலிஃபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி.
புனித இஸ்லாத்தின் விடிவெள்ளியாகிய நபி பெருமானை இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோமாக…
“எல்லாப் புகழும் இறைவனுக்கே”
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை .