தமிழக அரசுக்கு கோரிக்கை…
தமிழக முதல்வர் மற்றும்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு
ஐயா தமிழக அரசு பொறுப்பேற்று மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய ஆட்சியில் பல்வேறு சாதனைகள் பல்வேறு நலத்திட்டங்கள் பல்வேறு சிறப்பான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் தமிழக அரசு இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் பொது மக்களின் சார்பில் தங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
மாறிவரும் இன்றைய கால சூழலில் பௌத்தம், சமணம், கிறிஸ்துவம் இஸ்லாமியம் போன்ற பல்வேறு ஆலயங்களில் இல்லாத ஒரு தரிசன வழிபாட்டு முறை இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் சிறப்பு தரிசனம் விஐபி தரிசனம் என்று பல தரிசனங்கள் தற்பொழுது நடைமுறையில் இருப்பது
மத நல்லிணக்க
வழிபாட்டு முறைகளுக்கு உகந்தது அல்ல என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்
ஆகையால் மக்கள் நலனில் அக்கறையுள்ள தங்களுடைய அரசு இந்த முறைகளை நீக்கி வழிபாட்டு முறையில் எந்த விதமான சலுகைகளும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான
பொது தரிசனம் முறைகளை பின்பற்றி அதனை நடைமுறைப் படுத்தினால் அது தமிழக அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நற்பெயரை கொடுக்கும்
என்ற வகையில் அனைவருக்கும் ஒரே பொது தரிசனம் முறை என்று உத்தரவிட வேண்டும்
என்பது பொது மக்களுடைய அன்பான வேண்டுகோள் விருப்பம் கோரிக்கை ஆகையால் இதனை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்
மாண்புமிகு
தமிழக முதல்வரும் அறநிலை துறை அமைச்சரும் அதை சார்ந்த அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்துவார்களா மக்களுடைய எண்ணம்
ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து
தான் பார்க்கவேண்டும்
செய்தி லயன் வெங்கடேசன்,M A., செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்