முரளியின் 58 வது ஜனன தினம்

மறைந்த நடிகர் முரளியின் 58 வது ஜனன தினம் இன்று…!

நடிகர் முரளி  மே 19, 1964 இல்  கர்நாடக மாநில பெங்களூரில் சித்தலிங்கய்யா என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.  செப்டம்பர் 8, 2010இல் தனது 46வது வயதில் சென்னையில்  அமரரானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த முரளி அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த “பூவிலங்கு” எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 
1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். சேரன் இயக்கத்தில் இவர் நடித்த “பொற்காலம்”படம் முரளிக்கு நல்ல வரவேற்பைக் “கொடுத்தது.குடும்பம் ஒரு கோவில்”,
“மண்ணுக்குள் வைரம்””என் ஆச ராசவே”போன்ற படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்தார் முரளி.குறுகிய காலத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த முரளி சிறுவயதில் காலமான விடயம் இன்றளவிலும் ஓர் பேரிழப்பாகவே உள்ளது.ஒரு நல்ல கலைஞரை தமிழ் சினிமா இழந்து விட்டது.தற்போது இவரின் மகன் அதர்வா திரையுலகில் பணியாற்றி வருகிறார்.
முரளியின் தந்தை சித்தலிங்கையா ஓர் கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் 
தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி 
சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு,
கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, 
பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, 
சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா
 உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.இவர் அ.தி.மு.கவில் 
இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார். முரளி 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.

சிறிது காலமே முரளி தமிழ் சினிமாவில் வாழ்ந்திருந்தாலும்,அவர் ஆற்றிய கலைப்பணிகள் நீண்ட காலத்திற்கு அவரின் பெயர் நிலைக்க வைக்கும்..

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை.

Leave a Reply

Your email address will not be published.