ஜெர்மனி நாட்டில் நியூ ரென்பெர்க் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா!

உலகப் புகழ்பெற்ற பிரபல தமிழ் பரத நாட்டிய கலாதேவகி பங்கேற்பு!

பரத நாட்டியக் கலையின் வளர்ச்சி ஜெர்மனி நாட்டில் நியூ ரென்பெர்க் எனும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா உற்சவம் கடந்த 07.05 2022 அன்று
முதன் முறையாக
மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது.
ஆலய பரிபாலன சபையினரும் சுற்று வட்டார பொது மக்களும், பக்தர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வினை சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் ஸ்ரீ ஐயப்ப தாச சாம்பசிவ சிவாச்சாரியார் இலங்கை மற்றும்
ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ வரத ஸ்ரீரங்கன் குருக்கள் தலைமையில் திருவிழா உற்சவம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ஜெர்மனியில் முதல் முறையாக உலகப்புகழ் பரதநாட்டிய நட்சத்திர பிரபலம் நாட்டிய கலா தேவகி டாக்டர் சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் பங்கேற்று,
நூறு வருடத்திற்கு முன்னதாக ஆடிய தேவதாசி முறையை கையாண்டு தேர் மல்லாரி புஷ்பாஞ்சலி கீர்த்தனம் என பலவகை நடன வகைகளை திருவிழாவில் தேருக்கு முன்னதாக நாட்டியம் அபிநயம் செய்து ஆடினார்.
மேலும் அவர் இறைவனின் அருளால் தன் கலையின் மூலம் பக்தி உணர்வை மக்களுக்கு அர்பணித்து திருச்சேவை கலையை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார். மேலும் அவருடைய அற்புத பங்களிப்பு அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாட்டிய கலா தேவகி டாக்டர் சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள்
கூறுகையில் பரத நாட்டியம் என்பது தெய்வவழிபாடு களுக்காக மட்டுமே ஆடப்பட்டு வந்த நாட்டிய முறையாகும் இன்று அதன் வடிவங்கள் மாறினாலும் அதனை புனிதமாக எடுத்துச் செல்வது அனைத்து நாட்டிய கலைஞர்களின் கடமையாகும்.

ஐரோப்பாவில் பல கோயில்கள் உள்ளன விழா நிகழ்ச்சிகள் எங்கும் நடத்தப்பட்டாலும் தேவதாசிகள் தேருக்கு முன்னால் அரங்கேற்றமானது இதுவே முதன்முறையாகும்.

இந்த நடனம் ஜெர்மனி நியூ ரென்பெர்க் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது என்பதும் முதன்முறையாக ஐரோப்பாவில் ஆடப்பட்டு வந்தது என்பதும் இதில் குறிப்பிடத்தக்க பதிவாகும்.

சுகந்தி ரவிந்திரநாத்
நன்றி பாராட்டி கூறுகையில்,
இறைவன் அருளால் அது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் பெருமையுடன் கூறினார். அத்தோடு இவரது நாட்டியத்திற்கு ஜெயக்குமாரன் மாதவன் குழுவினர் மற்றும் தவில் ஆஸ்தான வித்வான் உலகப் புகழ் பெற்ற திரு பாபு அவர்களின் மிகச்சிறப்பாக வாத்தியங்கள்.மற்றும் இசைக்கருவிகளை வாசித்து நிகழ்ச்சிக்கு
மிகவும் அழகாக மெருகூட்டியது.

நமது நாட்டின் பாரம்பரிய கலைகளை உலக நாடுகளில் எடுத்துச் செல்வது மிகவும் பாராட்டுக்கு உரியதாகும். இதனால் நமது தமிழர்கள் உலக அளவில் பரவலாக இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இது போன்ற நிகழ்வின் கலந்துக்கொள்வதற்கு இது ஒரு வரலாற்றுச் சான்றாகும் என்று உணர்ச்சி பொங்க தெரியப்படுத்தினார்.

செய்தி சிரஞ்சீவி அனீஸ், ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ் இந்தியா,தமிழ்நாடு சென்னை.

Leave a Reply

Your email address will not be published.