அரசு பேருந்து-கார் மோதல்..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார் காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் முற்றிலும் நசுங்கியது. காரை ஓட்டிச் சென்ற கபிலன் சம்பவ இடத்திலேயே பலியானார் இவர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் தமிழ்மணியின் பேரன் ஆவார் தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்