ராஜபக்சேவுக்கு கடும் கண்டனம்..
அரசியல் ஒன்றே குறிக்கோள் அதிகாரமே எனது மந்திரம் என்று மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கவனிக்காமலும் அக்கறை செலுத்தாத இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு தமிழ்மலர் மின்னிதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. அன்றோர் மே மாதத்தின் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சே…
அதை இன்றளவும் மே மாதத்தில் தக்க பதிலடி கிடைத்தது போல்.. ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையும் முடிவு கட்ட சரியான நேரம் கொதித்து விட்டது போல கால சூழ்நிலை..
இலங்கை மண்ணில் பல லட்சம் மனங்களின் சாபக்கேடாகவும் சற்று ஆறுதலாகவும் வெள்ளையடித்த வண்ணம் இன்று அரங்கேறியுள்ளது..
ராஜபக்சே ராஜினாமா செய்தால் மட்டும் போதாது ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் மக்களிடத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என தமிழ்மலர் மின்னிதழ் கோரிக்கை வைத்துள்ளது…
அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என இதன் செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது..