ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு: வட மாநிலங்களில் பிரபலமாவாரா??
வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு நடவடிக்கைகளில் தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல்வரை விளம்பரப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலினை தேசிய தலைவராக விளம்பரப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.