வெயில் காலங்களில் தினமும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க….
கொய்யாப்பழம் வெப்ப வலயங்களிலும் துணை வெப்ப வலயங்களிலும் பயிரிடப்படும் பழமாகும்.
இப்பழத்தில் அதிகமாக வைட்டமின் ‘சி’ உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிக முக்கியமான சத்தாக உள்ளது.
மேலும் இதில் வைட்டமின் எ, பொட்டாசியம், போன்றவை அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
கொய்யாவில் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிக அளவில் கொய்யாவில் உள்ளது. அதே போன்று எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன.
கொய்ய மற்ற காலங்களை வெயில் காலங்களில் இந்த வகை பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்.
இந்த பழத்தை வெயிற்காலங்களிலே உண்ணுவது சிறந்ததாகும். இது பல்வேறு நோய்களை அடியோடு அழிக்க உதவி புரிகின்றது.
தற்போது கொய்யாவை வெயிற்காலங்களில் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
- கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறையும். இதற்கு முக்கிய காரணமே இதிலுள்ள நார்ச்சத்துக்கள் தான்.
- செரிமான கோளாறுகளை ஏற்படுத்தாமல் இருக்க இந்த பழம் உதவும். கூடவே இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
- கொய்யாவில் நீர்சத்து அதிக அளவில் உள்ளதால் இந்த வெயில் காலங்களில் அவ்வப்போது ஒரு கொய்யா சாப்பிட்டால் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும் இந்த பழம் உதவுகிறது.
- அதிக அளவில் பொட்டாசியம் இந்த பழத்தில் காணப்படுவதனால் இதய நோய்களை தடுத்து இதயத்தை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காத்து கொள்ளுமாம். அத்துடன் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்கவும் உதவுகிறது.
- நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை இந்த பழம் தரும். வெயில் காலங்களில் கொய்யாவை சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
- வெயில் காலங்களில் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். அதிக வெயில் போன்ற புற சூழல் தான் இதற்கு மூல காரணமே. கொய்யாவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்தை தடுத்து விடலாம்.
- கொய்யாவை சாப்பிட்டு வருவதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மேலும், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் மிக சுலபமாக மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளை தடுத்து விடலாம். கூடவே உடல் பருமனையும் குறைத்து விட இது உதவும்.
- கொய்யாவில் அதிக அளவில் மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் நரம்புகளை இலகுவாக்கி பாதிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ளும். அதே போன்று தசைகளில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.