ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி!

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. 

இந்திய வீராங்கனை மும்தாஸ் கான் 21 மற்றும் 47-வது நிமிடங்களில் கோல் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் மில்லி ஜிக்லியோ (18-வது நிமிடம்), கிளாடியா ஸ்வைன் (58-வது நிமிடம்) கோல் போட்டனர். இதன் பின்னர் கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 
ஷூட்-அவுட்டில் இந்தியாவின் ஷர்மிலா தேவி, கேப்டன் சலிமா, சங்கிதா குமாரி ஆகியோர் தங்களுக்குரிய வாய்ப்பை வீணடித்தனர். 3-வது இடத்தை பிடித்த இங்கிலாந்துக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து நடந்த இறுதிசுற்றில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை சாய்த்து 4-வது முறையாக மகுடம் சூடியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.