ரூ.2 லட்சம் பரிசுத் தொகைக்கான மாநில கூடைப்பந்து போட்டி!!
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 16-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஏப்ரல் 29-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப், 63/76 புதுத்தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று அந்த கிளப்பின் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.