ஜெகன்மோகன் ரெட்டிக்கு கிளம்பியது எதிர்ப்பு!
ஜெகன்மோகன் ரெட்டியின் முந்தைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த சுசரிதாவுக்கு, இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். குண்டூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ”சொந்த காரணங்களுக்காகவே எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தேன்,” என அவர் கூறினார். அமைச்சர் பதவி கிடைக்காத மேலும் சில ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களது ஆதரவாளர்கள் நேற்று பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.