ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 11வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இதனால், வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.
பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கிடைக்கும் பலன்கள் சர்வதேச அளவில் ஏற்பட்ட பதற்றத்தால் பாதிக்கப்படுகிறது. புதிய மற்றும் மிகப்பெரிய சவால்களை பொருளாதாரம் எதிர்கொள்கிறது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்திற்கு தடம் புரள செய்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.