பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் பலி: ஒருவர் படுகாயம்!!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில், கோனேரிப்பாளையம் என்ற இடத்தில் மின்னல் தாக்கி பெரம்பலூர் கம்பன் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். வெங்கடேஷ்(22), என்ற வாலிபர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.