தேனி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 3000 லி ஆக்ஸிஜன் சிலிண்டர்!!

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 3000 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவப்பட்டது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஏற்கனவே உள்ள 10 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்., 6ல் தமிழ்நாடு மருத்துவ பங்களிப்பு கழகம் சார்பில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்கு கூடுதலாக 3000 லிட்டர் அளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி நிறுவப்பட்டது.

இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 13 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜனை ஒருங்கிணைத்து வழங்கப்பட உள்ளனர். மேலும் அவசர தேவைகளுக்கு பூர்த்தி செய்வதற்காக தற்காலிக ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பு மையமும் அதன் அருகிலேயே நிறுவப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன் ஆய்வு செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.