சொத்து வரி உயர்வால் நகர மக்கள் ஏமாந்தது பல லட்சம்!
சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், 14 ஆண்டுகளாக கூடுதலாக பல லட்ச ரூபாய் வரி செலுத்திய பின்னும் மீண்டும் வரியை ஏற்றுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சென்னைக்கே அதீத முக்கியத்துவம் தரப்படும் என்ற குமுறல், தமிழகத்தின் பிற பகுதி மக்களிடம் நீண்ட காலமாகவே உள்ளது. இதற்கேற்ப, பாலங்கள், ரோடுகள், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பிற நகரங்கள் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 2008ல் தி.மு.க.,ஆட்சியின்போது, தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது, சென்னைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அப்போது சொத்து வரி விதிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி (எண்: 110 தேதி: 23-06-2008) வீடுகளுக்கு 25 சதவீதம், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதம், வணிகக் கட்டடங்களுக்கு 150 சதவீதம் வரை, சொத்துவரியை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதியளித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.