மாநிலத்தை விட அதிக வரி விதிக்கும் மத்திய அரசு: மஹா., துணை முதல்வர்!!
மும்பை: மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
டில்லி அரசின் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடிநீர் மற்றும் மின்சாரத்தை இலவசமாக வழங்கினால் வளர்ச்சி வருவாய் காலியாகிவிடும். மின்சாரம், குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என மக்கள் விரும்பினாலும், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.