மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் மயக்கம்!!
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள கள்ளராதினிபட்டியில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 15 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் கீழபூங்கொடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.