தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய தேவை: சென்னை உயர்நீதிமன்றம்!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் எனக்கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தற்போது தரமான ஆசிரியர் கல்வியே அவசியம் எனக்கூறியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் சம்பள உயர்வை நிறுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு; ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் சம்பள உயர்வு பெற உரிமையில்லை. அவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள். ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.