ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றத்திற்காக 24 அமைச்சர்களும் ராஜினாமா!!
அமராவதி: ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக, 24 அமைச்சர்களும், இன்று (ஏப்.,7) ராஜினாமா செய்தனர்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில், வரும் 11ம் தேதி, அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.