5ம் தேதி காங். நாடாளுமன்ற கட்சி கூட்டம்!!
நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்ந்து வருகின்றன. மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல்வேறு துறைகளில் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. விலை உயர்வை கண்டித்து 3 கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மாநிலங்களவை, மக்களவையில் செயல்பட வேண்டிய விதம் போன்றவை குறித்து விவாதிப்பதற்காக, 5ம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.