ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து!!
புதுடில்லி: ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., – எம்.பி., சாந்தா சேத்ரி பேசியதாவது: ‘ஒரு மாநிலத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இல்லாதபோது, அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, மேகாலயாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரத்தை அம்மாநில அரசுக்கு வழங்க, உள்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.