ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம்!!
சென்னை : ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலும் இடம் பெற்றுள்ளதாக, மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பாரம்பரிய, கலாசார இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள பாரம்பரிய இடங்களை, மத்திய அரசின் கலாசார அமைச்சகம் பட்டியலிட்டு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத்; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
இவர், தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் 25 இடங்களை பட்டியலிட்டார். அவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற, மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய கலாசார அமைச்சகம், அவருக்கு பதில் அனுப்பியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.