ரஷ்யாவுக்கு எதிராக உக்‍ரைனுக்‍கு தொடர்ந்து ஆயுத உதவி வழங்கும் அமெரிக்‍கா!

வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு மேலும் 2,000 கோடி ரூபாய்க்கு ராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. உக்ரைன்-  ரஷ்யா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.  

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனுக்கு ஏற்கனவே ஒன்றரை பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்து பொருட்கள் உட்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.