துரை வைகோ பிறந்த நாள்: அதிருப்தியாளர்கள் கிண்டல்!!
சென்னை: ‘என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்’ என்ற, ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில், சமூக வலைதளங்களில், ‘தொல்லைகள் மறந்த நாள்’ பாடலை பதிவிட்டு, கிண்டலடித்து உள்ளனர்.
துரைக்கு இன்று பிறந்த நாள். அவரை வாழ்த்தி, தென் மாவட்டங்களில் மட்டும் கட்சியினர் சார்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து, துரையின் அறிக்கை: எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் இல்லை. என் குழந்தைகளுக்கும், சிறு வயதில் இருந்தே, நாங்கள் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான, இந்த குறுகிய வாழ்க்கை, மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என, கருதுகிறவன் நான். என் பிறந்த நாளை வீணாக செலவு செய்து கொண்டாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.