தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!!
சென்னை: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுத்தந்ததுடன், தமிழகத்தில் பா.ஜ., வலுவாக காலூன்ற காரணமாக அவர் இருந்தார்.
மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து வரும் அண்ணாமலை, மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு, தீவிரமாக களப் பணியாற்றும் இளைஞர்கள் அடங்கிய புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.