ஐ.டி., விதிமுறைகள் ‘வாபஸ்’ இல்லை!!
புதுடில்லி: இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி, ‘பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு, மத்திய அரசு 2021ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ராஜ்யசபாவில் பேசியதாவது: அரசிடம், தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து மக்களிடம் புதிதாக கருத்து கேட்கவோ அல்லது விதிகளை திரும்ப பெறவோ திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.