பெரும்பாக்கம்; 5,628 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம் விறுவிறுப்பு!!!
தென் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் 4,428; வட சென்னையில் திருவொற்றியூர் கார்கில் நகரில் 1,200 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பெரும்பாக்கத்தில், 614 கோடி ரூபாயில், 4,428 வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.பெரும்பாக்கத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்ட, 200 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக, 1,200 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து, 926 வீடுகள் கட்டப் பட்டு உள்ளன.இதில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாம் கட்டமாக, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 4,428 வீடுகள் கட்ட, 614 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 493 கோடி ரூபாயில், 3,276 வீடுகள் கட்டப்படுகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.