பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு: பாடகர் மீது வழக்கு!!
ரேவா: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதுாறு பரப்பிய பாடகர் மீது, மத்திய பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாடகர் நவாஸ் ெஷரீப், மத்திய பிரதேசத்தின் ரேவா நகருக்கு, சமீபத்தில் வந்திருந்தார். அப்போது அவர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் அவதுாறு பரப்பினார். அவர் பேசிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியது.
ெஷரீப் கருத்துக்கு, ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைப் பார்த்த ம.பி.,யின் மங்க்வா நகரை சேர்ந்த சிலர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.