நிதி அமைச்சர் நிர்மலா – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு; ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்க கோரிக்கை!!
புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, திமுக தலைமை அலுவலகம் திறப்பு தொடர்பாக அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.